Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது?
அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது?

அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது?

00:16:52
Report
Heavy menstrual bleeding எனப்படும் அதீத இரத்தப்போக்கு காரணமாக அவதிப்படும் பெண்கள் பலர் உள்ளனர். கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதிலுள்ள பெண்களில் நான்கில் ஒருவர் இத்தகைய நிலைமையினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தொடர்பில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் Women’s Health Road Australia Incorporated (WHRAI)இன் ஏற்பாட்டில் மே 11ஆம் திகதி International Heavy Menstrual Bleeding தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் Heavy Menstrual Bleeding தொடர்பில் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் குடும்ப நல மருத்துவராக கடமையாற்றும் வாணி அர்ஜுனமணி அவர்கள். கூடவே இந்த நிலைமையால் பாதிக்கப்பட் காயத்ரி ஸ்ரீதர் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். இவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தனிப்பட்ட ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது?

View more comments
View All Notifications