Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி
புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி

புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி

00:29:30
Report
முனைவர் லோகமாதேவியின் கட்டுரைகளை வாசிக்க: https://solvanam.com/author/lokamadevi/Solvanam Uraiyaadalgal: Dr. Logamadeviமுனைவர் எழுத்தாளர் லோகமாதேவி- ஒரு சிறு முன்னுரைலோகமாதேவி தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத் திறன் கொண்டவர்.அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை தினமலர், சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை என பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.இவர் "தோழி விருது" மற்றும்2022 இன் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருதும் பெற்றுள்ளார்.இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய நூல்கள் எழுதியுள்ளார்.பலர் சர்வ சாதாரணமாக கடந்து செல்லும் தாவரம், ஆனால் நமக்கு அது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா?நூற்றாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட பாரம்பரிய தாவரப் பயன்பாடு எதாவது உங்களுக்குத் தெரியுமா?பாரம்பரியமாக மக்கள் பயன்படுத்திய மருத்துவத் தாவரங்களில், இப்போது அறிவியல் உண்மையென நிரூபித்ததையும், இன்னும் நிரூபிக்கப்படாததையும் பகிர முடியுமா?பழங்குடி மக்கள் தாவரங்களை எப்படி அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கிறார்கள்? இதற்கென்று சடங்குகளோ வாய்மொழிப் பாடல்களோ கர்ண பரம்பரைக் கதைகளோ உள்ளதா?? மனிதர்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையிலான ஆச்சரியப்பட வைக்கும் உறவு எதாவது உங்களுக்கு கிடைத்ததா?உலகம் அறியாத முறையில் ஆன்மீக உலகத்துடன் தொடர்பு கொள்ள அல்லது மனதைக் கையாள பயன்படுத்தப்படும் தாவரங்கள் எதாவது உள்ளதா?தாவர அறிவைப் பகிர்வதில் ஏற்படும் நெறிமுறைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், குறிப்பாக மருந்து நிறுவனங்கள் பழங்குடி அறிவால் லாபம் அடையும் சூழலில்?இன்னும் உலகத்திற்கு தெரியாத ஒரு “சூப்பர் ஃபுட்” அல்லது அதிசய மருந்தாக மாறும் சாத்தியம் கொண்ட தாவரம் உங்களுக்குத் தெரிகிறதா?தாவரங்களுக்கு உளவுத்திறன் அல்லது நினைவாற்றல் இருக்கிறதா என்று நீங்கள் நம்புகிறீர்களா? தற்போதைய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி

View more comments
View All Notifications